Thamizhagam - மீன் & இறால்
Friday, 19/09/2014, 6:16 PM
Welcome Guest | RSS

வணக்கம் தமிழகம் How can I get Money

வணக்கம் நண்பர்களே! இது உங்க வெப்சைட்! பிடிச்சிருந்தா உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க! தினமும் வாங்க! உங்க சந்தேகங்களை கேளுங்க! உங்கள் நண்பன் செந்தில்குமார், சிதம்பரம். தொடர்புக்கு: pskptc@gmail.com **** Visit Daily **** Get More about anything you want - Making Money, Videos, Audios, Articles, Images, and more.....
தேடு
Site menu
Site Friends

மீன் & இறால்

ஹெல்த்தி மீன் குழம்பு

மிகக்குறைவான எண்ணெய் பயன்படுத்துவதாலும், அதிகமான சின்ன வெங்காயம் சேர்ப்பதாலும் இக்குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. டயட் செய்பவர்கள் மீனை இம்முறையில் சமைத்து சுவையாக சாப்பிடலாம்

தேவையானப் பொருட்கள்:

  • மீன்(சுறா, தூனாமீன் தவிர்த்து) - அரைக் கிலோ
  • சின்னவெங்காயம் -20 முதல் 25
  • தக்காளி - ஒன்று
  • மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
  • மல்லி தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • வெந்தயம் - 2 சிட்டிகை (2 பின்ச்)
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை:
     மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
     

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.




3 நிமிடம் நன்றாக வதக்கி நறுக்கின தக்காளி, புளி சேர்த்து மேலும் 3 அல்லது 4 நிமிடங்கள் வரை வதக்கவும்.




இப்போது தீயின் அளவைக் குறைத்து பொடி வகைகளை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.




ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.



இரண்டு சிட்டிகை வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.



அரைத்த மசாலாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு புளி காரம் சரிபார்த்து மீதமுள்ள கறிவேப்பிலை, மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இடையிடையே மீன் பாத்திரத்தை சுழற்றி வைக்கவும். இப்படி செய்வதால் மீன் சட்டியில் ஒட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.




நன்றாக கொதித்து மீன் வெந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். பொடித்து வைத்த வெந்தயப் பொடி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.



சுவையான எண்ணெய் குறைவான ஆரோக்கியமான மீன் குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கும் பொருத்தமாக இருக்கும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.



இறுதியாக ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவை அதிகரிக்கும்.

இறால் பிரியாணி

தேவையானப் பொருட்கள்

  • பெரிய இறால் - 3/4 கிலோ
  • பாஸ்மதி அரிசி - 4 டம்ளர்
  • வெங்காயம் - 4
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • தயிர் - 2 தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது - 3 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 2 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் - அரை தேக்கரண்டி
  • பட்டை(விரல் அளவு) - 3
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 4
  • எலுமிச்சை பழம் - ஒன்று
  • மல்லி, புதினா தழை - தலா அரை கட்டு
  • எண்ணெய் - 100 மி.லி
  • நெய் - 3 தேக்கரண்டி
இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.



இறாலுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சாஸ் போட்டு நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.



ஒரு அகன்ற வாணலியில் 60 மி.லி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.



வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.



அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு தண்ணீர் சுண்ட வறுத்து வைக்கவும்.



வெங்காயம் தக்காளி வதங்கியதும், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள், மற்ற மசாலாதூள் வகைகள், தயிர், மல்லி, புதினா தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் வதங்க விடவும்.



பிறகு வறுத்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்து பிரட்டி ஒரு நிமிடம் வைக்கவும். அதன் பிறகு எண்ணெய் மிதந்து வரும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.



அரிசியை நன்கு மூன்று முறை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்ததும், ஊற வைத்த அரிசியில் தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு போட்டு அதற்கு தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். எலுமிச்சைச்சாறை ஊற்றவும்.




தண்ணீர் சுண்டும் நேரம் மசாலாவை ஊற்றி அடி சாதத்தை மேலே மேலே போட்டு மீதியுள்ள கரம் மசாலாவை பரவலாக தூவி விரும்பினால் ஆரஞ்சு கலர் சிலதுளிகள் ஓரிடத்தில் போடவும்.



அடுப்பில் தம் போடும் தட்டை வைத்து மூடியில் பேப்பர் போட்டு மூடி மேலே வெயிட் வைத்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.



சுவையான இறால் பிரியாணி ரெடி. விரும்பினால் அரிந்த வெங்காயத்தில் ஒரு கைப்பிடியை எடுத்து வறுத்து பரிமாறும் நேரம் பிரியாணியின் மேல் தூவி பரிமாறலாம். இதற்கு ரைத்தா மட்டும் வைத்தாலே மிகவும் சுவையாக இருக்கும். இந்த சுவையான குறிப்பினை திருமதி. அப்சரா அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்





உள்ளே செல்
இலவச உறுப்பினராக
தொடரும் நண்பர்கள்
Bookmark
கேள்வி பதில்
காலண்டர்