சாமிகளை கூட நம்பிடலாம். சாமிகளின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் ஆசாமிகளை
மட்டும் இன்று நம்பவே முடியாது. இதை அடிப்படையாகக் கொண்டு
உருவாகியிருக்கும் படம் ஆசாமி. இந்த படத்தில் ஷகீலாவுடன் சந்தான பாரதி,
அனுமோகன், பாண்டு ஆகியோரும் போலி சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
சட்டத்தின் பிடியிலும் சமுதாயத்தின் பிடியிலும் இருந்து தப்பிவிடும்
இவர்களை அம்மன் அருள் பெற்ற ஒரு பெண் அழித்துவிடுவதாக போகிறது படத்தின்
கதை. இந்த படத்திற்கு சாமியார்கள் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறார்களாம். படத்தை திரைக்கு வரவிடமாட்டோம் என்று கிளம்பியிருக்கிறது
சாமியார் குழு ஒன்று.
பேப்பரோ கீ போர்டோ கிடைத்தால் போதும்
கவிதை கவிதையாய் எழுதித் தள்ளுகிற ஆசாமியா நீங்கள்? சினிமாவில் பாடல்
ஆசிரியராக வேண்டும் ஆசை லட்சியம் இருக்கிறதா? உங்களுக்கு சரியான வாய்ப்பு
காத்திருக்கிறது. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நான் என்னும் படத்தில்
ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பாடலாசிரியர் ஒருவரை
அறிமுகப்படுத்தப் போகிறார் விஜய் ஆன்டனி. நீங்கள் ஏன் அந்த பாடலாசிரியராக
இருக்கக் கூடாது?
vijayantony.com எனும் விஜய் ஆன்டனியின்
இணையதளத்தில் பாடலுக்கான மெட்டு உள்ளது. இதை டவுன்லோடு செய்து கொண்டு,
தகுந்தாற் போல பாடலை எழுதி அனுப்புங்கள். vijayantonylyrics@gmail.com இந்த
மின்னஞ்சலுக்கு பாடலை அனுப்ப வேண்டும். பாடல் எழுதுகிறவர்களுக்கு புரிய
வேண்டும் என்பதற்காக முதல் பல்லவியையும் இவரே எழுதி
பாடிக்காட்டியிருக்கிறார். எழுதி அனுப்புபவர்களில் யாருடைய பாடல்
தேர்ந்தெடுக்கப்பட... Read more »
உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருக்கிறீர்களா? ஒரே மாதத்தில் வீட்டில் இருந்தபடியே 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
இந்த விளம்பரம் உங்கள் வாழ்வில் திருப்பு
முனையாக இருக்கலாம்! இப்படிப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பல இடங்களிலும்,
பஸ்களிலும் ஒட்டப்பட்டு பணம் பறிக்கும் போலி நிறுவனங்கள் பல இயங்கி
வருகின்றன. இந்த போலி விளம்பரத்தால் இல்லத்தரசிகளே அதிகம்
பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் நம் தமிழ் பூமி இதழுக்கு அளித்த
பெயர் வெளியிட விரும்பாத வாசகிகளின் மனக்குமுறல்கள்…
திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்ப
பெண்மணி, இவருடைய கனவர் நல்ல வேலையில் இருக்கிறார்.
படித்துக்கொண்டிருக்கும் இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டில் கம்ப்யூட்டர்,
இன்டர்நெட் வசதியெல்லாம் இருக்கின்றன. இதனால் இப்பெண்மனி வீட்டிலிருந்தே
ஏதேனும் தொழில் செய்யலாம் என பல மாதங்களாக யோசனையில் இருந்துள்ளார்.
அப்போதுதான், சென்னையில் இருக்குற ஒரு
‘மெடிகல் டிரான்ஸ... Read more »
முகத்தின் எண்ணைப் பசை நீங்க: முட்டையின் வெண்கரு 7
ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை
மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும்.
முக வறட்சி நீங்க: பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.
கரும்புள்ளி
மறைய: முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும். முகப்பரு
நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள்
மறையும்.
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்
மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்தது... Read more »
தினமும்
இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு
வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10
நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.
*ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவு... Read more »